கொவிட் உப கொத்தணிகள் உருவாகியுள்ளன – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்!

244 0
covid-19 வைரஸ் இலங்கையில் சமூக தொற்று நிலைக்கு வந்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சமூகத்தில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றமை மோசமான நிலையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 21 மாவட்டங்களுக்கும் அதிகமான மாவட்டங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாகவும் பல உப கொத்தணிகள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொடை கொத்தணியுடன் குறித்த உப கொத்தணிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதும் சில சந்தர்ப்பங்களில் அவற்றைக் கண்டு பிடிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.