கொழும்பு மெனிக் சந்தை நாளை முதல் மூடல்!

336 0

கொழும்பு மெனிக் சந்தை நாளை 22ஆம் திகதி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியை அடுத்து பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த நடிவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெனிக் சந்தை வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை ஐந்து மணி வரை மெனிக் சந்தை மூடப்படும் என குறித்த வர்த்தகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பேலியகொட மீன் சந்தை தொழிலாளர்கள் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் கொட்டாவயில் உள்ள மீன் சந்தையில் நால்வருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இரு மீன் சந்தைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.