மினுவாங்கொட கொரோனா தொற்று உறுதியானோருடன் நெருங்கிய தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2451 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 109 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2297 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
கொரோனா தொற்று சந்தேகத்தில் 356பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.