மணிவண்ணனின் உறுப்புரிமை நீக்கம்!

258 0

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை முடிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளரால் கடந்த 13ம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.