தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி.
* பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* கடைகளின் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம்.
* பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.