அம்பாறையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு

230 0

கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டு, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அம்பாறை-  சாம்பல்திடல் பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் இருந்த கிணற்றில், ஆயுதங்கள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய  இன்று (திங்கட்கிழமை) அவ்விடத்தை முற்றுகை இட்டனர்.

இதன்போது குறித்த கிணற்றில் இருந்து குழாய் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ரி-81 ரக துப்பாக்கி மற்றும் 30தோட்டாக்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் அவைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.