கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களிலிருந்து கோரப்பட்ட 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
செளபாக்யா கொவிட்-19 புனர்வாழ்வு கடன் திட்டத்தின் கீழ் 177.9 பில்லியன் ரூபாய் கடன், மூன்று கட்டங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கிகரிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 133 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தற்போது அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலின் 2ஆம் அலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகளவு வணிக நிறுவனங்களே பாதிக்கப்பட்டுள்ளன.
வணிக நிறுவனங்களின் பாதிப்பு நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பெரும்பாலான கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே, வணிக நிறுவனங்களிலிருந்து கோரப்பட்ட கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.