கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம் – உயர்தர மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

210 0

கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை, குறித்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் வீண் குழப்பமடையத் தேவையில்லையெனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.