ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவிய விதத்தை பகிரங்கப்படுத்த முடியாது – இராணுவத்தளபதி

239 0

மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி எவ்வாறு பரவியது என்பது குறித்து சில தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவை உறுதிப்படுத்தப்படும் வரை அவற்றைப் பகிரங்கப்படுத்த முடி யாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று பரவிய காலத்தில் சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனவே நிச்சயமாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களாலேயே கொரோனா பரவியிருக்க வேண்டும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.