சமூகத்திலிருந்து தோன்றும் கொரோனா கொத்தணிகளால் சமூகமயமாக்கப்படுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரண்டிக்ஸ் கொரோனா கொத்தணியின் தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றுவதே மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தனிமைப்படுத்தப்படக்கூடிய பகுதிகளில் நடமாட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.