கச்சாயில் கைக்குண்டு வைத்திருந்ததாக ஒருவர் கைது!

334 0
  • சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.