அதி பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையாக, பூஸா சிறைச்சாலை பெயரிடப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் மாத்திரமே, இந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரென, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது அதி பாதுகாப்பு சிறைச்சாலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.