முல்லைத்தீவு கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் மக்கள் குடியேற இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக கேப்பாப்பிலவு மக்கள் பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கேப்பாப்பிலவின் பாடசாலைக்கு எதிர்ப் பக்கமாக உள்ள பகுதிகளில் குடியேறுவதற்கான இணக்கத்தினை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கேப்பாப்பிலவு மக்களைச் சொந்த இடத்தில் குடியமர்த்தாத இராணுவம் 2012ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் கேப்பாப்பிலவின் சூரிபுரம் பகுதியில் மாதிரிக் கிராமம் ஒன்றினை உருவாக்கி அதில் மக்களை தங்க வைத்துள்ளனர்.
தமது சொந்த இடங்களில் குடியேற்றுங்கள் என கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வரும் நிலையில் கேப்பாப்பிலவின் ஒருபகுதியில் குடியேறுவதற்கான இணக்கப்பாட்டினை இராணுவம் நேற்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.