தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்ள சஹ்ரான் ஹசீம் திட்டமிட்டிருந்ததாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முதலாவது தாக்குதலின் பின்னர் மூன்று கட்டங்களாக தாக்குதல்கள் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் குழு உறுப்பினரிடம் மேற்கொண்ட விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போது தீவிரவாத ஒழிப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேசிய தவ்ஹீத் ஜமாத் குழுவின் தலைவர் சஹ்ரான் ஹசீம் மற்றும் நௌபர் மௌலவி இடையில் தலைமைத்துவத்திற்காக சண்டை ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.