மொரட்டுவையில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று(சனிக்கிழமை) இரவு 08 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ பகுதியில் உள்ள பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
எனினும் மொரட்டுவ மாநகரசபைக்குட்பட்ட சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே எகொட உயன மற்றும் மோதர ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்த நீர்வழங்கல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.