மைத்ரிபால சிறிசேன பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
நான்காவது நாளாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (சனிக்கிழமை) முற்பகல் ஆஜராகியி, வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இறுதியாக நேற்று முன்தினம் (15) ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய அவர், பல்வேறு முரணான வாக்குமூலங்களை வழங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன, ஒக்டோபர் 5 மற்றும் ஒக்டோபர் 12ம் திகதிகளில் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியத்தை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.