அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ரிஷாட் பதியுதீனின் ஆதரவை அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், ரிஷாட் பதியுதீனின் ஆதரவின்றி முன்மொழியப்பட்ட 20 வது திருத்தத்தை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது என கூறினார்.
அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றங்களில் சரணடைந்து கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு பதிலாக தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் கடந்த அரசாங்கத்தினால் குறிவைக்கப்பட்ட போதும் அவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்