பூகொட இளைஞன் மரணம் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் ​பணிநீக்கம்

239 0
கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர் திடீர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பூகொட பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

களவு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் கடந்த 11 ஆம் திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

21 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.