யாழில் கைக்குண்டுடன் இளைஞர் கைது

254 0

யாழில். கைக்குண்டு வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரிடம் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 22 வயது மதிக்கத் தக்க கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.