சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெற்று வந்த நிலையில் இன்று (16) அதிகாலை 4.30 மணி அளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட அரியாலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே மதில் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.