குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மரணம்

279 0

புத்தளம், ஆனமடுவ கொட்டுக்கச்சி குடா கிவுல பிரசேத்தில் நேற்று (15) குளவி கொட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ கொட்டுக்கச்சி கெகுரஹான பகுதியைச் சேர்ந்த என்.எம்.டிக்கிரி பண்டா (வயது 60) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழ்துள்ளார்.

குறித்த நபர், கொட்டுகச்சி குடா கிவுல பகுதியில் மீன் விற்பனையின் ஈபட்டுக்கொண்டிருந்தத போது மரமொன்றில் கட்டப்பட்ட குளவிக் கூடு கலைந்து அவரைத் தாக்கியுள்ளது.

இதன்போது காயமடைந்த குறித்த நபரை காப்பாற்றுவதற்காக அங்கு வருகை தநத மேலும் ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 6 பேர் கொட்டுக்கச்சி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மீன் விற்பனையில் ஈடுபட்ட நபர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.