கோடி ரூபா பணத்தை செலுத்திய MT New Daimond கப்பலின் கெப்டன்

248 0

அண்மையில் தீப்பரவலுக்கு உள்ளான MT New Daimond கப்பல் கெப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கேட்டுள்ளது.

குறித்த கப்பலின் கிரேக்க இன கெப்டனான தீரோஸ் ஹில்லியாஸ் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த இடையீட்டு மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்றது.

இந்த மனு கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹார் முன்னிலையி இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது கப்பல் கெப்டன் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது கட்சிக்காரர் பிழையை ஒப்புக் கொண்டு 12 மில்லியன் ரூபா தண்டப் பணத்தை கொழும்பு மேல் நீதிமன்றில் செலுத்தி முடித்துள்ளதாக மன்றுக்கு தெரியப்படுத்தினர்.

அதனால் தமது கட்சிக் காரருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் கெப்டன் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை.

அதன்படி MT New Daimond கப்பல் கெப்டனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.