ரியாஜ் பதியுதீனின் மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!

245 0

தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உத்தரவிடக்கோரி ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதிகளுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டில் தன்னை மீண்டும் கைதுசெய்வதை தவிர்க்கும் வகையில் உத்தரவிடுமாறு கோரிக்கை ரியாஜ் பதியுதீன் இந்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில் பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட 07 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.