“மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒரு கூட்டாக இணைந்து செயற்படுவதற்கு முன்னர் தமிழ் மக்களுடைய உரிமைகள், அபிலாஷைகள் தொடர்பில் நாங்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தேயாகவேண்டும். அவ்வாறு வராமல் வெறுமனே ஒற்றுமை என்ற வெற்றுக் கோஷத்துக்காக நாம் பயணிக்க முடியாது” எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
பிரத்தியேக நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார்.
0 திலீபன் நினைவேந்தலின் போது தமிழ்க் தேசியக் கட்சிகள் சிலவற்றிடையே இணைந்து செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்று ஏற்பட்டது. இந்த இணக்கம் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதா?
0 ’20’ ஆவது திருத்தம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றது. பௌத்த மகாசங்கங்களே அதனை எதிர்க்கத் தொடங்கியுள்ளன. இதனை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் எப்படியிருக்கின்றது?
0 தற்போதைய புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும் நிலையில், இனநெருக்கடிக்கான நியாயமான தீர்வு ஒன்று அதில் உள்ளடக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?
0 புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமானால், அதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்பு எப்படியாக இருக்கும்?
0 சீனாவிலிருந்து உயர் மட்டக்குழு ஒன்று கொழும்பு வந்து பேச்சுக்களை நடத்தியது. அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஒருவர் வரவிருக்கின்றார். இந்த நிலைமைகளைத் தமிழர் தரப்பு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா? உங்கள் பார்வை என்ன?
0 ஜெனீவாவில் இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது. அதன் பின்னர் என்ன நடைபெறப்போகின்றது. இதில் உங்களுடைய திட்டங்கள் என்ன?
போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்;
நன்றி -தினக்குரல் இணையம்