டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி

301 0

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், கனடா வீரர் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், 49-வது இடத்தில் உள்ள கனடா வீரர் ஜாசன் அந்தோணியை சந்தித்தார். 33 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-15, 21-14 என்ற நேர்செட்டில் ஜாசன் அந்தோணியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 19 வயது இந்திய வீரரான லக்‌ஷயா சென் 21-15, 7-21, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் சோல்பெர்க் விட்டிங்குஸ்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.