சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா தொற்று!

298 0

ரத்தொளுகமவில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகிய நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

சமய நிகழ்வில் கலந்துகொண்ட குழுவில் 12 பேர் மாத்திரம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொரோனா தொற்றாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் குடியிருப்புகளுக்குள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அடுத்த சில நாட்களில் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

மேலும், குறித்த சடய நிகழ்வில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 12 பேரில் நால்வர் ரத்தொளுமகவில் வசிப்பவர்கள் எனவும் ஏனையவர்கள் கலவத்தை மற்றும் முதுவாடிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.