கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று!

290 0

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளியே கம்பஹா மாவட்ட தொழிற்சாலைகளிலிருந்து மேலும் 16 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கட்டுநாயக்க, சீதுவ பொது சுகாதார வைத்திய அலுவலர் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தமாக 89 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 18 ஆயிரத்து 133 பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஏழாயிரத்து 20 முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.