யாழில் வீடொன்றில் தீ விபத்து – தீயணைக்கும் பணிகள் முன்னெடுப்பு

401 0

யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி விதானையார் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (வியாழக்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து,  தீயை அணைக்கும் முயற்சியில் யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இந்த  தீ விபத்தில் குறித்த வீட்டின் பெரும்பான்மையான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளதாக அவர்  தெரிவித்தார்.

இதன் காரணமாக வீட்டில் இருந்த பெறுமதிமிக்க பல பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.

எவ்வாறிருப்பினும் இந்த தீ விபத்தின்போது வீட்டில் எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.