சிறிலங்காவில் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக, மேலதிகமாக 10 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர், டொக்டர் ஜயருவன் பண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுவரை 14 வைத்தியசாலைகளில் 2 ஆயிரத்து 400 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக 10 வைத்தியசாலைகளை தயார்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்படும் பட்சத்தில் வைத்தியசாலைகளில், அதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் எவரும் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.