கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இன்றைய தினம் 250 முதல் 300 PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.