கம்பஹாவில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவைமீறிய 142 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த நான்காம் திகதி முதல் இன்று(வியாழக்கிழமை) காலை ஆறு மணிவரையான காலப்பபகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.