ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லவாய – பேரகல வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
மேலும் முச்சக்கரவண்டி சாரதி உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதி உட்பட ஆறுபேர் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, பாதையை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தையின் தாய் உட்பட ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில், அப்புத்தளை மற்றும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.