யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவ கட்சி உட்பட ஆறு அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.
154 கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தன இதில் 121 கட்சிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தன. இதற்குள் ஆறு கட்சிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சமத்துவ கட்சியும் ஒன்றாகும்
இக்கட்சியின் சின்னம் கேடயம். இந்தச் சின்னத்தில் கடந்த காலத்தில் பல தேர்தல்களில் இக்கட்சி சுயேச்சையாகப் போட்டியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.