முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனையையும் அவரது சகோதாரரையும் கைதுசெய்வதற்கான முயற்சிகள் அரசியல் நோக்கம் கொண்டவை என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கின்றது என்பது எங்களுக்கு தெளிவாக தெரிகின்றது,ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்ட பின்னர் அவரை மீண்டும் கைசெய்யுமாறு 100 பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ண ரிசாத் பதியுதீனின் சகோதரர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நபரை மீண்டும் சந்தேகநபராக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
ரிசாத் பதியுதீனின் சகோதரரை மீண்டும் கைசெய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது விசாரணை அறிக்கையை ஆராய்ந்துள்ளார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கம் இந்த விவகாரத்தை அரசியலுக்கு பயன்படுத்துகின்றது,சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து சில மதத்தலைவர்கள் சில கருத்தினை வெளியிட்டனர் அதன் பின்னர் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்ட நபரை கைதுசெய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர் என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
ரியாஜிற்கு எதிரான ஆதாரங்கள் குறித்து கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் காங்கேசன்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என இது அரசியல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.