முகக்கவசம் அணியாத இருவர் கைது ; இரண்டு இலட்சம் சரீரப் பிணையில் விடுதலை

255 0

முகக்கவசம் அணியாமல் விடுதியில் தங்கியிருந்த இருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் இருவருக்கும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப் புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளுபிட்டி பகுதியில் தங்கும் விடுதி ஒன்றில் முகக்கவசம் அணியா மல் இருந்த இளைஞர் மற்றும் யுவதியை பொலிஸார் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவும் விதத்தில் செயற்பட்டார்கள் என அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த இருவரும் தாங்கள் கொரோனா தொற்று பரவும் விதத்தில் செயற் பட வில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து குறித்த வழக்கு ஜனவரி 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

அத்துடன், குறித்த இவரும் மதிய உணவை உண்பதற்காக முகக்கவசம் அணியாமல் இருந்ததாகக் அவர்களது சட்டத்தரணி நீதிமன்றில் தெரி வித்துள்ளார்.

அதன் பின்னர் இருவரும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடு விக்கப் புறக்கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.