கொழும்பு மெனிங் சந்தையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 32 கடைகள் மூடப்பட்டுள்ளன.
குறித்த சந்தையில் தொழில்புரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் மெனிங் சந்தையின் 35 ஊழியர்களுக்கு பி.சி.ஆர். சோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.