சிறிலங்காவில் 113பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

277 0

சிறிலங்காவில் மேலும் 113 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஐந்து பேர் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் எனவும் ஏனைய 108 பேரும் குறித்த தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை மினுவங்கொட கொவிட்-19 தொற்று கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 721ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐயாயிரத்து 168ஆகப் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து இதுவரை மூவாயிரத்து 357 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் ஆயிரத்து 798 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.