களுத்துறை – மத்துகம பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, சொகுசு பஸ் உரிமையாளர், அதன் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதி ஆகியோரே இவ்வாறு அடை யாளம் காணப்பட்டுள்ளதாக மத்துகம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பஸ் உரிமையாளரின் மனைவி மத்துகமவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். குறித்த அலுவலகம் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு அங்கு பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.