கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் – கொழும்பில் மூடப்பட்டுள்ள வீதி..!

364 0

கொழும்பு – பொரளை லெஸ்லி ரணகல மாவத்தை  தற்காலிகமாக பொலி ஸாரால் மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொண்டபோது அவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கொழும்பு – பெரளையில் இரு உணவகங்கள் உட்பட ஆறு கடைகள் தற்காலிமகமாக மூடப்பட்டன.

பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த சில நாட்களாக பொரளையில் அமைந்துள்ள குறித்த ஆறு கடைகளுக்கு சென்றதையடுத்து, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய ஆறு கடைகளும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.