ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள நாவா மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் நேற்று இரவு ஹெலிகாப்டர்களில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 15 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.