இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் உறவினர் ஒருவர் நியமிக்கப்பட்டார்

283 0

இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் உறவினர் நியமிக்கப்பட்டதால் பிரச்சினைகள் எழுந்தன என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரை அழைத்து நான் விளக்கம் கோரினேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

எனது ஆட்சிக்காலத்தில் மனிதஉரிமை மீறல்கள் இடம்பபெறுகின்றன என இலங்கையின் மனிதஉரிமை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவைக்கு அறிவித்ததுஎன சிறிசேன தெரிவித்துள்ளார்.

படையினரும்பொலிஸாரும் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை ஆணைக்குழு முறைப்பாடுசெய்ததுஎன அவர் தெரிவித்துள்ளார்.


பொலிஸ் நிலையங்களில் துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் தெரிவித்தது,இது குறித்த விசாரணைகளை பூர்த்தி செய்யும் முன்னரே மனித உரிமை ஆணைக்குழு இது குறித்து ஜெனீவாவிற்கு தெரிவித்திருந்தது என சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணைக்குழு செய்த முறைப்பாடுகள் காரணமாகஇலங்கை இராணுவத்தினரும் பொலிஸாரும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைவதற்கான வாய்ப்புகளை இழந்தனர் எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நான் ஆணைக்குழுவின் தலைவரைஅழைத்து என்ன செய்கின்றீர்கள் என கேட்டேன் , உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தை ஒருவர் இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் உயர் பதவியில் அமர்த்தப்பட்டமை பின்னரே எனக்கு தெரியவந்தது அவரே இலங்கைக்கு எதிராக அறிக்கைகளை ஜெனீவாவிற்கு அனுப்பியுள்ளார் என சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.