பாக்கு விலை குறைந்தது

311 0

கடந்த சில மாதங்களாக,  20 ரூபாய் வரையில் உயர்வடைந்திருந்த பாக்கின் விலை, தற்போது சற்று குறைவடைந்துள்ளதாக, மொத்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது பாக்கொன்று  10 – 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீரற்ற வானிலையின் காரணமாக,  அண்மைக் காலமாக பாக்குக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியதுடன், பாக்கின் விலை சடுதியாக உயர்வடைந்திருந்தது.

எவ்வாறாயினும், தற்போது  போதியளவு பாக்கு இருப்பில் உள்ளதால்,  பாக்கு விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.