பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செந்தில் தொண்டமான் நியமனம்

261 0

பதுளை மாவட்டத்துக்கான பிரதமரின் ஒருங்கிணைப்பாளராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஊவா மாகாண முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால், அலரி மாளிகையில் வைத்து, நேறறு(13) கையளிக்கப்பட்டது.

பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளராகச் செயற்பட்ட செந்தில் தொண்டமான், தற்போது பிரதமரின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.