பட்டதாரி பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஒத்தி வைப்பு

267 0

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண நிலை காரணமாக இரண்டாம் கட்ட பட்டதாரி பயிற்சித் திட்டம் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்ணசிறி, தற்போது இயங்கும் பயிற்சிப் பணியிடங்களில் ஒக்டோபர் 16 வரை மாற்றங்களைச் செய்யுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சித் திட்டம் நேற்று(12) ஆரம்பமாகவிருந்தது.