ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ரணில்!

266 0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் கடந்த 6 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், சுகயீனம் காரணமாக பிரிதொரு தினத்தினை கோரியிருந்தார்.

இதற்கமைய இன்றைய தினம் அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.