மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கம்பஹாவைச் சேர்ந்த தாதியார் ஒருவருக்கு கொரோனா தொற்றுக் குள்ளாகியுள்ளதையடுத்து வைத்தியசாலையில் அவர் கடமையாற்றிய ஒரு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றிய தாதியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்தாகவும் தேவையில்லாமல் எவரும் வைத்தியசாலைகளுக்கோ வீதிகளிலே செல்லவேண்டம் எனவும் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று என சமூக வலைத்தளங்களில் வெளிந்த செய்தியையடுத்து மக்கள் பீதியடைந்தனர். இது தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த தாதியர் மட்டு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்ததாகவும் கடந்த 4ம் திகதி அவர் அவரது ஊரான கம்பஹாவிற்கு விடுமுறையில் சென்ற நிலையில் அவரது கணவனின் சகோதரி பிறண்டிக் ஆடைத்தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த நிலையில் அவரை பி.சிஆர் பரிசோதனைக்குட்படுத்திய போது வருக்கு கொரோனா தொற்று கண்டுபிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பரிசோதனையின் போது குறித்த தாதியருக்கு கோரோனா தொற்றியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர் கொரோனா தொற்று சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த தாதியர் கடமையாற்றிய பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அவருடன் கடமையாற்றியவர்கள் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களை சுயதனிமையாக இருக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளநடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாகவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் தேவையில்லாமல் பதட்டப்பட தேவையில்லை எனவும் முகக்கவசம அணியுமாறும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் பொது மக்கள் தேவையில்லாமல் வைத்தியசாலைக்கு செல்லவேண்டாம் என அவர் தெரிவித்தார்.