தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்து பரீட்சைக்குத் தோற்றிய ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமலை சேனையூர் மத்திய கல்லூரியில் இன்று வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்ற வந்த ஒருவரையே ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெருகல் மாவடிச்சேனையைச் சேர்ந்த 21 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரை நாளை மூதூர் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.