தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் விநியோகிக்கும் மத்திய நிலையங்களை இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் 18 பொலிஸ் எல்லைப்பகுதிகள் மற்றும் திவுலபிட்டிய, ஜாஎல, கந்தான, சீதுவ ஆகிய பகுதிகளில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டம் மீள அறிவிக்கும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த பகுதிகளில் இந்த நடவடிக்கையை கடுமையான முறையில் நடைமுறைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாரேனும் விற்பனை நிலையங்களை திறந்திருந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது