கொள்ளுப்பிட்டியிலுள்ள, ப்ரெண்டிக்ஸ் தலைமையக ஊழியர்களிடம் நடத்தப்பட்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவரின் மனைவி இரத்மலானை அரச வங்கியில் பணிபுரிகின்ற நிலையில், குறித்த வங்கி தற்காலிகமாக இன்று காலை மூடப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிப் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.