புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள மற்றுமொருவர் கொழும்பு புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியே இவர் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மனைவி வைத்தியர் எனவும், அவர் பிரசவ விடுமுறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் தொழில்புரியும் குறித்த நபர், கல்கிஸ்ஸ- படோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், அவர் கொள்ளுப்பிட்டியவிலுள்ள பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பிரதான அலுலகத்துக்கும் சென்று வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.